சவூதி அரேபியாவில் குண்டுவெடிப்பு : 21 பேர் பலி - பின்னணியில் யார் ? சல்மானுக்கு விடப்பட்டுள்ள சவாலா ? உலக முஸ்லிம்களின் சந்தேகம்.....!!
சவூதி அரேபியாவின் முக்கிய நகரமான தம்மாம் நகருக்கும் அருகிலுள்ள கத்தீப் நகரில் நேற்று ஜும்ஆ தொழுகையின் போது இமாம் அலி பள்ளிவாசலில் தற்கொலைபடை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்து தாக்குதலை நடத்தியுள்ளான்.
தாக்குதலில் 21 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்....)
பின்னணியில் யார் ?
சவூதி அரேபியா கடும் சட்ட திட்டங்கள் கொண்ட நாடு, கொலை, கற்பழிப்பு, ஆயுதங்களை கொண்ட திருட்டு, போதை பொருட்கள் கடத்துதல் ஆகியவற்றிற்கு மரணதண்டை கொடுக்கும் நாடு, தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் நாடு,
குற்றங்கள் குறைவாக நடக்கும் நாடு சவூதி அரேபியா என்பதாலும், கொலையும், தற்கொலையும் இஸ்லாத்தில் தடை என்பதை விளங்கிய நாடு என்பதாலும் அதிலும் பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற மக்களை கொல்லும் அளவுக்கு சவூதி அரேபியா ஈமான் இல்லாத நாடு இல்லை என்பதாலும் இந்த தாக்குதலின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக உணர முடிகிறது.
சல்மானுக்கு விடப்பட்டுள்ள சவாலா ?
சவூதி அரேபியாவின் மன்னராக கடந்த ஜனவரி மாதம் சல்மான் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உறுதியான ஈமான் தாரியான அவர் ஆட்சிக்கு வந்த இந்த 5 மாதத்தில் தம்முடைய அதிரடியான நடவடிக்கையின் மூலம் உலக முஸ்லிம்களை தன் வசம் ஈர்த்தார். ராஜ தந்திரியான அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உலக முஸ்லிம்களுக்கு அவர் மீது நேசத்தை கொடுத்தது,
அதேசமையம் அவருடைய நடவடிக்கை அனைத்தும் அமெரிக்காவுக்கு வெறுப்பூட்டும் வகையிலும், அமெரிக்காவை பொருட்படுத்தாத வகையிலுமே அமைந்தது.
1. ஒபாமா சவூதி அரேபியா வந்தபோது ஒபாமாவை காக்க வைத்து விட்டு அசர் தொழுகைக்கு சென்றது.
2. அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற இருந்த சல்மான் & ஒபாமா சந்திப்பு நிகழ்ச்சியை திடீரென்று ரத்து செய்து அமெரிக்க பயணத்தையும் தவிர்த்தார் சல்மான்,
3. ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் உதவி கோராமலும், ஆலோசனை பெறாமலும் தன்னிச்சையாக அரபுப்படைகளை உருவாக்கி போரை சிறப்பாக நடத்தினார்.
4. பாலஸ்தீன் மீது இனிமேலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதன் எதிர்விளைவு கடுமையாக இருக்கும், அரபு மண்ணிலிருந்து இஸ்ரேல் துடைத்து எறியப்படும் என்று பகிரங்க எச்சரிக்கை.
இப்படி சல்மானின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலக முஸ்லிம்களை அவர் மீது நேசத்தையும், அமெரிக்க இஸ்ரேலிய அரசுகளுக்கு வெறுப்பையும் ஏற்படுத்தின.
இந்நிலையில்....
ஷியா பிரிவினர் அதிகம் கொண்ட கத்தீப் நகரில் ஷியாக்களின் பள்ளிவாசலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதால் இதை சன்னி பிரிவினர் செய்திருப்பார்கள் என்று செய்தி வெளியாவதால் பதிலுக்கு சன்னி பிரிவின் பள்ளிவாசலில் ஷியா பிரிவினர் இதுப்போன்ற தாக்குதலில் ஈடுபட்டால்....
சவூதி அரேபியாவில் ஷியா சன்னி பிரச்சினை உருவாகி விடும், அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறி விடும்.
இதே பாணியை தான் கடந்த காலங்களில் அமெரிக்காவை எதிர்த்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைன், லிபியா மன்னர் கடாபி ஆகியோருக்கு நடைபெற்றதை கண்டோம்.
அதே பாணியை சவூதி அரேபியாவிலும் கையாள தொடங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை உலக முஸ்லிம்களுக்கு கிளப்பியுள்ளது.
வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA சக்தி வாய்ந்த உளவு நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று....
CIA தன்னுடைய வேலையை கன கச்சிதமாக செய்துள்ளதோ என்ற சந்தேகத்தை வெகுவாக உருவாக்கியுள்ளது.
இன்று வரை உலகத்தின் பார்வையில் அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் நேச நாடுகளாக இருந்தாலும் உள்ளுக்குள் இதுப்போன்ற முறுவல்கள் நிறைய இருக்கிறது.
எது எப்படியோ ராஜதந்திரியான மன்னர் சல்மான் அவர்கள் அனைத்து சூட்சமங்களையும் விளங்கி கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயலாற்ற உலக முஸ்லிம்களின் சக்தி வாய்ந்த துஆவும், ஆதரவும் என்றென்றும் சவூதி அரேபியாவுக்கு உண்டு....