கப்ர் வணங்கிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்ற
தயாராகும் சவுதி அரசு!
- சிறப்புத் தகவல்கள்!
அன்புக்குரிய முக நூல் சொந்தங்களே! தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிவேக அபார வளர்ச்சி கண்டு ஆட்டம் கண்டவர்கள்; அரிப்பெடுத்தவர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு விதமான விதவிதமான அவதூறுகளையும், பொய்களையும் டிஎன்டிஜே மீது பரப்பி தங்களது அரிப்பை தீர்த்துக் கொண்டு வருகின்றனர். என்னதான் அவதூறு சொல்லி அரிப்பைத் தீர்த்துக் கொள்ள அந்த அவதூறு பேர்வழிகள் முயற்சி செய்த போதும் அவர்களின் அவதூறுகள் நமக்கு சிறு பாதிப்பையும் நமக்கு தந்தபாடில்லை.
அவர்களது சதித்திட்டங்களை வல்ல நாயன் முறியடித்து வருகின்றான். அல்ஹம்துலில்லாஹ்...
✔அவதூறு செய்தி:
அந்த அவதூறுப்பேர்வழிகள் தற்போது புதிதாக அவிழ்த்துவிட்டுள்ள லேட்டஸ்ட் அவதூறு சவுதி அரசாங்கம் தவ்ஹீத் ஜமாஅத்தினர்களை கண்காணிக்கிறதாம். நடவடிக்கை எடுக்கப்போகிறதாம்.
தமிழகத்தில் இருந்து
சவுதி அரேபியாவிற்கு வந்தவ முஸ்லீம்களில்
தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் உள்ளவர்கள் யார் யார் என சவுதி அரேபிய உளவுத்துறை தகவல் சேகரிக்கிறதாக அந்த அவதூறு செய்தி சொல்கின்றது.
மேலும் அவ்வாறு கணக்கெடுத்த பிறகு அவர்கள் மீதும் அவர்களுக்கு வங்கிகள் வழியாக பணம் அனுப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்போகுதாம் சவுதி அரசாங்கம்.
சவுதி அரேபியா வில் உள்ள முகமது நபியின் நினைவு இல்லத்தை இடிப்பதற்கு இவ்வமைப்பை சேர்ந்தவர்கள் சதித்திட்டம் தீட்டியதால்தான் இந்த நடவடிக்கையாம்.
போலிசாரின் இந்த கணக்கெடுப்பு நிறைவுக்கு வந்ததும்
தவ்ஹீத் ஜமாத் என்கிற அமைப்பு
இஸ்லாத்திற்கு எதிரான தீவிரவாத அமைப்பு என சவுதி அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாக அந்த அவதூறு செய்தியில் எழுதி தங்களது அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளனர் இந்த அவதூறு பேர்வழிகள்.
இது குறித்து சவுதியின் உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய நிர்வாகிகளை அதன் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் நாம் தொடர்பு கொண்டோம்.
✔கணெக்கெடுக்கச் சொன்னது உண்மைதான்:
சவுதி அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற சில உண்மையான தகவல்களோடு இவர்கள் தங்களது பொய் செய்திகளையும் கலந்து கூறியுள்ளது தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது.
சவுதி அரசாங்கம் சவுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினர் யார் யார்? யார் யாரெல்லாம் இங்கு அந்த அமைப்பின் கொள்கையை ஏற்று செயல்பட்டு வருகின்றார்கள் என்று உளவுத்துறையின் மூலமாக கணக்கெடுக்கச் சொன்னது உண்மைதான். ஆனால் அதற்கான காரணத்தைத் தான் இந்த பொய்யர்கள் தவறாக சித்தரித்துவிட்டார்கள். ஆம்! தோழர்களே!
✔சவுதி அரசாங்கம் வியந்த மனித நேயப்பணி:
சவுதி அரேபியாவில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்யும் மனித நேயப்பணிகள் கொஞ்ச நெஞ்சமல்ல. சவுதியில் ஹஜ்ஜின் போதும், உம்ராவிற்கு வரும் பயணிகளுக்கும் அவசர இரத்தம் தேவைப்படும் போது அவர்களுக்கான இரத்தத்தை கொடுப்பதில் முன்னிலை வகிப்பது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்புதான் என்றும், இவர்கள் மூலம் பெறப்படும் இரத்த தானத்தின் வாயிலாகத்தான் பெருவாரியான ஹஜ் பயணிகளுக்கும் உம்ரா பயணிகளுக்கும் தங்குதடையில்லாமல் இரத்தம் வழங்கி உயிர் காக்கும் பணிகளை செவ்வனே செய்ய முடிகின்றது என்றும், மேலும் எங்களது மருத்துவமனையின் இரத்த வங்கியில் இரத்த இருப்பு குறையும் போதெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்த்தினரை தொடர்பு கொண்டுதான் தாங்கள் இரத்ததான முகாம்களை நடத்தி இரத்தங்களை பெற்று ஹஜ் உம்ரா பயணிகளுக்கு உதவுகின்றோம் என்றும் ரியாத், தம்மாம், ஜித்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கிங்க் பஹத் உள்ளிட்ட பெருவாரியான மருத்துவமனை நிர்வாகத்தின் வாயிலாக சவுதி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
✔டிஎன்டிஜேவின் பணிகளை சவுதி அரசாங்கத்திற்கு எத்திவைத்த இந்திய தூதரகம:
மேலும் இங்கு வந்து வந்த இடத்தில் அசம்பாவிதங்கள் மூலமாக மரணிக்கக்கூடிய இந்திய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களுக்கு உண்டான அனைத்து உதவிகளும் ஜித்தா, தம்மாம், ரியாத் உள்ளிட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் உள்ள தன்னலம்பாராத நிர்வாகிகள் வாயிலாக சிறப்பான முறையில் மனித நேய சேவையாக செய்யப்பட்டு வருகின்றது என்ற புள்ளிவிபரங்கள் இந்திய தூதரகத்தின் மூலமாக சவுதி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக இந்த அளவிற்கு தன்னலம்பாராத தொண்டர்களைக் கொண்ட ஒரு அமைப்பை நாம் கண்ணியப்படுத்த வேண்டும்; அவர்கள் குறைவான நபர்களா அல்லது அதிகமாக நபர்களா என்று அறிந்து அவர்களுக்கு தேவையான இன்ன பிற உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து வந்த உத்தரவின் காரணமாகத்தான் இந்த கணக்கெடுப்பை சவுதி உளவுத்துறை செய்து வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
✔டூம் விவகாரம் வெளிப்படுத்திய கொள்கை உறுதி:
தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய மற்றும் மனித நேயப்பணிகள் ஒருபுறம் வீரியம் பெற மறுபுறம் சத்தியத்தை யாருக்கும் பயப்படாமல் வளைந்து கொடுக்காமல் சொல்லும் கொள்கை உறுதி சவுதி அரசை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் உளவுத்துறையின் சிறப்புப்பிரிவிற்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அந்த நபர் தகவல் கூறியுள்ளார்.
இதில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது மதீனா டூம் விவகாரம் தான். இதுதான் சவுதி அரசின் கவனம் தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் பலமாக திரும்ப காரணமாக அமைந்ததாகவும் அந்த உளவுத்துறை அதிகாரி சிலாகித்து கூறியுள்ளார்.
✔சவுதி அரசின் கொள்கையை பிரதிபலித்த தவ்ஹீத் ஜமாஅத்:
கிட்டத்தட்ட 35ஆண்டுகள் புனித ஹரம் ஷரீஃபில் குத்பா உரையாற்றிய உஸைமீன் என்ற மார்க்க அறிஞர் நபிகளாரின் கப்ருக்கு மேலாக எழுப்பப்பட்டுள்ள அந்த குப்பாவை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று ஃபத்வா வழங்கினார். சவுதியின் முத்திரை பதித்த மார்க்க அறிஞர் பின் பாஸும் இதே ஃபத்வாவை வழங்கி இதையே சவுதி அரசின் எழுதப்படாத கொள்கையாக பிரகடனம் செய்தார்.
நபிகளாரின் கட்டளைக்கு ஏற்ப அந்த ஃபத்வாவை தருணம் பார்த்து நிறைவேற்ற சவுதி அரசாங்கம் காத்திருந்த நிலையில் இது குறித்து முஸ்லிம்கள் மத்தியில் பேரளவிலான விழிப்புணர்வை உலக அளவில் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியிருப்பது சவுதி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதே தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது இந்த அளவிற்கு சவுதி அரசாங்கம் நன்மதிப்பு வைக்க காரணமாக அமைந்துவிட்டதாகவும் அந்த உளவுத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
✔கப்ர் வணக்கத்திற்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு சவுக்கடி:
அதே நேரத்தில் இங்கு சலஃபுகள் என்ற